உலகின் மிகவும் உயரமான மரம் இலங்கையில்!

கிறிஸ்மஸ்தினத்தினை முன்னிட்டு உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தை ஜேர்மன் நாடு அமைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிசம்பர் மாதம் 25 ம் திகதி யேசுநாதர் பிறந்ததினத்தை உலகம் முழுவதுமே கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவது வழமை.
ஜேர்மனியின் டார்ட்முண்ட் நகரில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் உயரமானது 147 அடியாகும்.
இம்மரம் முழுவதும் கண்கவர் வண்ணத்திலான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு அதன் மீது டார்ட்முண்ட் (Dortmund 2017) என மின்விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டு மரத்தின் உச்சியில் மஞ்சள் விளக்கால் ஏஞ்சல் போன்ற உருவம் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்வையிடுகின்றனர். ஜேர்மனி மக்கள் இத்தினத்தைக் கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றார்கள்.
Related posts:
தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி!
இலங்கைக்கு வருகைத்தந்த 78 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா !
கொரோனா அச்சுறுத்தல் - இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டது !
|
|