உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை 8 ஆம் திகதி!
Wednesday, October 4th, 2017நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் 11 பாடங்களுக்குரிய செயன்முறைப் பரீட்சை இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு பூராகவும் அமைந்துள்ள 398 மத்திய நிலையங்களில் 56 ஆயிரத்து 439 பரீட்சார்த்திகள் இந்த செயன்முறை பரீட்சைக்கு தோற்ற உள்ளனர். பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெறும்.
உயிரியல் தொழில்நுட்ப பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 20ம் திகதிமுதல் 22ம் திகதி வரை நடைபெறவுள்ளது. அழகியல் மற்றும் மனைப் பொருளியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் 20ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
Related posts:
அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிப...
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
10 வருடங்களாக 450 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
|
|