உணவில் நச்சுத்தன்மை? – 300 பெண்கள் மயக்க முற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதி!

தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 300 பெண்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 10 மணியளவில் 300 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் இவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பஸ்களிலும், அம்பியூலன்ஸ் வண்டிகளிலும் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படுகின்றனர் எனினும் தாம் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் வித்தியாசமான வாயு வந்ததாகவும், இதை முகர்ந்த காரணத்தினாலேயே தமக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளதால் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Related posts:
|
|