உக்ரைன் மோதலின் பின்னணி – சீனாவின் பக்கம் திரும்பும் உலக நாடுகள்..!

உக்ரைன் போர் ஆரம்பமாகியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் ஆரம்பித்துள்ளதை பலரும் கவனித்திருக்கலாம்.
மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தனர் .
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் சீனாவுக்குச் சென்று சீன அதிபரை சந்தித்தார்.
அத்துடன், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock சமீபத்தில் சீனா சென்றிருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீனா சென்று, சீன அதிபரை சந்தித்தார்
இந்நிலையில், ஜேர்மனிக்கு வருமாறு சீன மக்கள் குடியரசின் தலைவர் Li Qiangக்கு தற்போது ஜேர்மன் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் மாதம் 20ஆம் திகதி, இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜேர்மன் தலைநகர் பெர்லின் வருமாறு Li Qiangக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|