இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 14 வருட சிறை!

Sunday, May 13th, 2018

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் மதிப்பீட்டு அதிகாரியாக கடமையாற்றியவருக்கு கொழும்பில் மேல் நீதிமன்ற நீதவான் சம்பத் விஜேரத்ன 14 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் 9 000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நபரொருவரிடம் அவ் வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்காக கடிதம் ஒன்றைத் தாம் தருவதாக கூறி 15,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றிருப்பதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இறைவரி திணைக்களத்தில் மதிப்பீட்டு அதிகாரியாக கடமையாற்றிய ஜனக்க பண்டார தஸநாயக்கவுக்கே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: