இலங்கை – தென்கொரியா இடையே பொருளாதார புரிந்துணர்வு!

Monday, June 11th, 2018

இலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான பொருளாதார புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை பிரதிநிதிகளுக்கும், கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது பாலம் அமைத்தல் மற்றும் ஆடைத் தயாரிப்பு தொழிற்துறைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இருநாடுகளும் உடன்பட்டுள்ளன.
அத்துடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் பல திட்டங்கள் மற்றும் வர்த்தக முதலீடுகள், விவசாயம், கடற்றொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பான புரிந்துணர்வு வேலைத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Related posts: