இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்யம் இடையே வர்த்தக நடவடிக்கை!

Sri-Lanka-flag-720x450 Tuesday, February 13th, 2018

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் தற்போது 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக டுபாய் மற்றும்கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கான கன்சல்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்த வைபவம் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் இலங்கைக்கும் டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இடையில் கன்சல்ட் ஜெனரல்இராஜ தந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடநிறைவை குறிக்கும் வகையிலும் டுபாயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இலங்கைக்கான கன்சால்ட் ஜென்ரல் டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜியத்திற்கான கன்சல் ஜெனரல் சரித ஜட்டகொட உரையாற்றுகையில் இலங்கை ஜனாதிபதிமற்றும் பிரதமர் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளைப் பற்றி விபரித்துள்ளார்.