இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு இரசாயனகூட வசதி!

Tuesday, January 16th, 2018

தாய்லாந் தலைநகர் பாங்கொங்கில் அமைந்துள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்ணம் தீட்டும் இரசாயன கூடத்தின் மூலம் இலங்கையில் இரத்தினக்கல் வர்த்தகத்தில்ஈடுபட்டுள்ளோருக்கு சர்வதேச இரத்தினக்கல் வர்ண இரசாயன கூட வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான வைபவம் அண்மையில் ‘பேருவளை – சீனக்கோட்டை’ இரத்தினக்கல் மற்றும் தங்காபரண சங்கத்தின் ஏற்பாட்டில் பேருவளை – மொரகல்ல – சின்னமென்பேஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இந்த இரசாயன கூட வசதிகள் மூலம் இலங்கையின் இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு சர்வதேச தரத்திற்கு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம்கிடைக்கும் என்று சர்வதேச இரத்தினக்கல் வர்ணம் தீட்டும் இரசாயன கூட சங்கத்தின் இலங்கைப் பணிப்பாளர் காமினி சொய்சா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட இரத்தினக்கல் பிரதிநிதிகள் சுமார் 300ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts: