இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் – ஜப்பானிய தூதரகம் !

Tuesday, March 27th, 2018

இலங்கையின் நிலை மாறுகால நீதிப் பொறிமுறைச் செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது தொடர்பாக இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என ஜப்பான் தூதவர் தெரிவித்தர் என கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது இது தொடர்பில் ஜப்பானியத் தூதரகம் விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா கருத்துத் தெரிவித்திருந்தார் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருந்தார் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது தொடர்பிலும் கேள்வியெழுப்பப்பட்டது

 அதற்குப் பதிலளித்த ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது தொடர்பிலும் கேள்வியெழுப்பப் பட்டது இதற்குப் பதிலளித்த ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது தொடர்பாக இலங்கை அரசும் மக்களுமே தீர்மானிக் வேண்டும் இவ் விடயத்தில் ஜப்பான் எவ் வித கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று ஜப்பான் தூதுவர் குறிப்பிட்டதாக ஜப்பான் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

நல்லினக்கத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளை ஜப்பான் வரவேற்பதாகவும் இலங்கைக்கத் தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயாராகவிருப்பதாகவும் ஜப்பான் தூதரகம் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts: