இலங்கையில் 25000 வெளிநாட்டு ஊழியர்கள்!

Tuesday, January 2nd, 2018

தற்போது 25,000 வரையான வெளிநாட்டு ஊழியர்கள்இலங்கையில் தங்கியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என, குடிவரவு குடிகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நாடுகளின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் பணியாற்றவே அவர்கள் இலங்கையில் தங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக முதலீட்டு சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் பணியாற்றவும் வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அவர்களில் சிலர் இலங்கை பிரஜைகளை திருமணம் முடித்துள்ளதாகவும், அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: