இலங்கையில் நில அளவைப் பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – அமைச்சர் கயந்த!

இலங்கையில் நில அளவைப் பணிகளில் வெளிநாட்டவர் எவரும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
இலங்கையில் நில அளவைப் பணிகளில் வெளிநாட்டுக் கருவிகள், வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால் வெளிநாடுகளைச் சேர்ந்த எவரையும் நில அளவைப் பணிகளில் இணைத்துக் கொள்ள மாட்டோம். முற்றுமுழுதாக உள்நாட்டவர்கள் மட்டுமே அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமான எந்தவொரு நடவடிக்கையிலும் நில அளவைத் திணைக்களம் ஈடுபட மாட்டாது.
மேலும் நில அளவை தொடர்பான அனைத்துத் தகவல்களும் முகாமைப்படுத்தப்பட்டு தேவையான தகவல்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.
Related posts:
மலேசியாவில் இலங்கையர்கள் கைது!
இலங்கையின் வரைபடம் புதுப்பிக்கப்படுகின்றது - நில அளவை திணைக்களம்!
வடகில் மேலும் 3,000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்க...
|
|