இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த புதிய செயலி !

Thursday, March 29th, 2018

இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வகை செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெங்கு நோய் தொற்றானது பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவுவதனைத் தடுக்கும் வகையில் கையடக்க தொலைபேசி செயலி (App) வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த செயலி “டெங்கு நோயற்ற பிள்ளைகள்” (DengueFreeChild) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் செயற்பாடு மிக்க டெங்கு நோய் மற்றும் சந்தேகத்திடமான முறையில்காணப்படும் காய்ச்சலை கண்டுபிடிக்க உதவுகின்றது.

இதனைக் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சிங்கப்பூர் Nanvang தொழில்நுட்ப பல்லைக்கழகம் ஆகியன இணைந்து தயாரித்துள்ளது.

டெங்கு தொற்று ஏற்படக் கூடிய பிரதேசங்களை இதனூடாகக் கண்டுபிடித்து துப்பரவு செய்வதற்கும் அழிப்பதற்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதிய செயலியைப் பயன்படுத்தி டெங்கு நோய் தொற்று தொடர்பான பிரதேசங்களில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தொடர்பில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்என நம்பப்படுகின்றது.

Related posts:


சிறந்த முறையில் பங்குச் சந்தைப் பரிவர்தனை - பங்குச் சந்தையின் தலைமைநிறைவேற்று பணிப்பாளர்!
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...