இலங்கையில் அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல்!

Fever-1 Tuesday, May 15th, 2018

தென் மாகாணத்தினுள் பரவி வரும் இனங்காண முடியாத வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார பிரிவுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

முக்கியமாக இந்த காய்ச்சல் குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த காய்ச்சல் அதிகமாக பரவியுள்ள நோயாளிகள் தங்காலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள்தற்போது கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த தினங்களில் இந்த வைரஸ் காய்ச்சலால் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள்தெரிவிக்கின்றன.

இதனால் நோயாளர்களை பார்வையிட வருவோர் அவதானத்துடன் இருக்குமாறு கராபிட்டிய மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் அருணத சில்வாதெரிவித்துள்ளார்.


இரவு நேர இரத்த பரிசோதனையில் பரப்பப்படுகிறனவா எய்ட்ஸ் கிருமிகள்!
கொக்குவில் மஞ்சவனப்பகுதியில் வாள்வெட்டு சம்பவம்: அச்சத்தில் மக்கள்!
உலக இளைஞர் விழாவில் கலந்துகொள்ள ஈ.பி.டி.பியின் இளைஞர் அணி தலைவர் ரஷ்யா விஜயம்!
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் டிசம்பரில் தீர்மானம்!
உள்ளுராட்சி உதவியாளர்கள் 21 பேருக்கு 18 வருடங்களின் பின்னர் பதவி உயர்வு!