இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் முன்னேற்றம்!

Tuesday, March 20th, 2018

இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி தற்போது எழுச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறித்த துறையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக புள்ளிவிபரங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

ஜனவரி மாதம் புதிய உற்பத்தி மற்றும் சேவை கட்டளை குறைபாட்டினால் உற்பத்தி மற்றும் சேவை துறையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இருப்பினும் பெப்ரவரி மாதத்தில் புதிய உற்பத்திக் கட்டளைகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவிலான மீள் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts: