இலங்கையருக்கு டுபாயில் ஆயுள் தண்டனை!

டுபாயில் கடந்த வருடம் கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு இந்த முறை கிறிஸ்மஸ் தினத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான குறித்த இலங்கையர், அவருடன் தங்கி இருந்த மற்றுமொரு இலங்கையரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்காப்பு நோக்கிலேயே தாம் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் கூறி வருகிறார். இந்தநிலையில் இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.
Related posts:
இலங்கை அகதிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் திட்டம் - பிரித்தானியா!
சசிகலாவின் சிறைச்சாலை அறையில் பொலிஸார் சோதனை!
பாரிய நிலநடுக்கம் குறித்த ஊகங்களால் அச்சமடைய வேண்டாம் - புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவ...
|
|