இலங்கைப் பயணத்தை பிற்போட்ட ஜேர்மன் ஜனாதிபதி?

germany-steinmeier-srilanka-696x392 Monday, March 12th, 2018

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, ஜேர்மனியின் ஜனாதிபதி ஃபராங் வால்ட்டர் ஸ்டெயின்மீயர் (Frank-Walter Steinmeier) தமது இலங்கைக்கான விஜயத்தை பிற்போட்டுள்ளார்.

பேர்லின் அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி 28ம் திகதி வரையில் அவர் இந்தியா மற்றும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார். எனினும் கண்டி மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அதனை அடுத்து அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் அவரது விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தும் இது குறித்து ஜேர்மனி அரசாங்கம் உத்தியோகபூர்வமான அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை.


ஜனாதிபதி ஆணைக்குழுவில் பரபரப்பான ஆவணம்
கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி !
மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி!
கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - பூநகரி கூட்டுறவ...
தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர்  குடியேற்றம்!