இலங்கைக்கு 150 கோடியை ஒதுக்கியுள்ளது இந்தியா!

Saturday, February 3rd, 2018

2018ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிசமர்ப்பித்தார்.

இந்த உரையின் போது இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு 75 கோடி ரூபாவாகஇருந்ததுடன் இம்முறை அது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய ஊடகச்செய்திகள் கூறுகின்றன.

Related posts: