இலங்கைக்கு வருகிறது மற்றுமொரு ஆபத்து!

ஆபத்தான நோ ய்களை உருவாக்கும் இறால் இனம் ஒன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு ஆறு வகையான ஆபத்துகளை விளைவிக்கும் இறால் இனம் நாளையதினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
Vannamei எனப்படும் இறால் வகையே இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை நீர்வள அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சட்டங்களை மீறி இந்த இறால் வகை, நாட்டுக்குள் கொண்டு வருவதாக திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரையில் இந்த வகையான இறால் வளர்க்கப்படாத நிலையில் அதில் 6 வகையான ஆபத்தான நோய்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இறால் வளர்ப்பை தடுக்கும் வகையில், இலங்கைக்குள் அதனை கொண்டு வருவதனை தடுக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வதத்த ய...
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்...
|
|