இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து!

Wednesday, December 13th, 2017

புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக 58வது பிரிவின் தளபதியாக இருந்த பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுவரை இராணுவ பேச்சாளராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன 51வது பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சுமித் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த நியமனம் எதிர்வரும் 22ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: