இராஜினாமா செய்யும் கடிதத்தை அனுப்பியுள்ள மஹிந்த தேசப்பிரிய!

Friday, November 29th, 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக உள்ள நிலையில், அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய 2020 வரையிலும் பதவியில் இருக்கலாம்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதன் பின்னர், அது அரசியலப்பு பேரவைக்கு அனுப்பிவைக்கப்படும். அரசியலமைப்பு பேரவை தீர்மானம் ஜனாதிபதிக்கு மீளவும் அனுப்பிவைக்கப்படும்.

அதன் பின்னரே, மகிந்த தேசப்பிரியவின் கடிதம் தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும். இதுவே, சாதாரண சம்பிரதாயமும் ஆகும்.

Related posts: