இந்த ஆண்டு இறுதியில் கைச்சாத்தாகிறது இலங்கை-சீனா வர்த்தக உடன்படிக்கை
Friday, May 19th, 2017
இந்த ஆண்டின்; இறுதிக்குள் இலங்கையும் சீனாவும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சீனப்பிரதமர் லி கியுயாங்கும் முடிவுசெய்துள்ளனர்.
சீனாவில்இடம்பெற்ற இருதரப்புஉரையாடல் களின்போது ஏற்பட்ட இந்த உடன்பாடு முலம் இலங்கையின் கடற்போக்குவரத்து, ஆகாய போக்குவரத்து மற்றும் பொருட்களை கொள்வனவு செய்தல், சேமித்தல், வினியோகித்தல், பராமரித்தல் உள்ளிட்ட விடயங்களைக் கையாளுவதற்கு சீனா பக்கபலமாக இருக்கும் என்று தேர்விக்கப் பட்டுள்ளது. இந்துப் பெருங்கடல் பிராந்தியத்தை மையமாக வைத்து முன்னேடுக்க திட்டமிடபட்டுள்ள இலங்கையின் இந்த ; திட்டத்திற்கு சீனா உறுதுணையாக இருக்கும் என்பதற்கான இணக்கத்தை சீனப் பிரத
மர் லி கியுயங் இலங்கைப் பிரதமரிடம் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப் படுகிறது. .
உலகெங்கிலுமுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை பாதுகாக்கும்; வலிமையான சட்ட முறைமையை உருவாக்கி முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சீனப்பிரதமர் இலங்கைப் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் நீடித்த ஒத்துழைப்பிற்கும், நட்பிற்கும் ஆதரவிற்கும் சீனப்பிரதமருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் ஹம்பாந்தோட்டை வர்த்தகமையம் மற்றும் கொழும்பு பொருளாதார மையத்தின் நன்மைகளையும் சீனாப்பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
Related posts:
|
|