இந்தோனேஷியாவலிருந்து இலங்கைக்குத்  தேங்காய் !

Thursday, January 4th, 2018

இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித் தெரிவித்துள்ளார்.

தேங்காய் இறக்குமதிக்கு இறக்குமதியாளர்கள் 11 பேர் அனுமதி கோரியுள்ளதாகவும் பிலிப்பைன்ஸிலிருந்து தேங்காய் இறக்குமதி  செய்யப்படவுள்ளதாகவும் குறித்த தேங்காய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவுடன் அது தொடர்பில் ஆராயப்பட்டு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்குமதியாளர்களுக்கு தெங்கு கொள்வனவுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் தேங்காய் விலை குறையும் வாய்ப்பு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: