இந்திய இராணுவ உயரதிகாரி இலங்கை விஜயம்!

1526275775-india-L Monday, May 14th, 2018

7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத்தின் உயரதிகாரியான ஜெனரல் பிபின் ரவாட் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியா – இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இராணுவத் தளபதி ஜெனரல் சேனநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜெனரல் பிபின் ரவாட் மற்றும் அவருடன் வருகை தந்துள்ள குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.