இந்தியாவின் வாழ்நாள் விசாவுக்கு வம்சாவளியினர் விண்ணப்பிக்கலாம் – இந்திய தணை தூதுவர்!

Tuesday, October 24th, 2017

இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ். இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில் இடம்பெற்ற வயலும் வாழ்வும் மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் இந்திய வம்சாவழி மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு;

கடந்த இரண்டரை வருடங்களாக யாழ்.இந்திய துணைத் தூதுவராக இருக்கின்றேன். ஆனால் இது வரை இங்கு வந்து உங்களை சந்திக்காமை கவலையளிக்கிறது. இருந்தும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய எந்தப் பிரச்சினைகள் என்றாலும் எங்களிடம் கூறுங்கள் எங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

மேலும் இங்குள்ள பிள்ளைகளின் கல்விக்கு நாங்கள் உதவத் தயாராகவுள்ளோம். குறிப்பாக உயர்தரம் பல்கலைக்கழக கல்வியை வறுமை காரணமாகத் தொடரமுடியாதிருந்தால் அவர்கள் தொடர்பில் எங்களுக்கு விபரம் தாருங்கள் நாங்கள் உதவுகின்றோம்.

இதனை விட இந்தியாவில் சென்று மேலும் உயர் கல்வியைத் தொடர வேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்கின்றோம். நீங்கள் ஒரு சதம் கூட செலவு செய்யத் தேவையில்லை. அடிப்படைத் தகுதிகள் இருந்தால் அதற்காக நீங்கள் எங்களிடம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவின் வாழ்நாள் விசாவுக்கும் விண்ணப்பிக்கமுடியும். அந்த வாழ்நாள் விசா இருந்தால் இந்தியாவிலும் வசிக்கமுடியும். அதற்கு உங்களுடைய உறவு முறை முன்னோர்கள் இந்தியாவில் இருந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை எனவும் குறிப்பட்டார்.

Related posts:

புதிய அரசின் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்ப...
சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக...
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் வருகை - மாவட்ட பதில் அரச அதிபர் பி...