இதுவரை 2 இலட்சத்து 69 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளன – சுகாதார தொற்று நோய் பிரிவு!

Wednesday, September 23rd, 2020

இதுவரையான காலப் பகுதியில், 43849 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 6626 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1470 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 269483 ஆகும்.

இதற்கிடையில், குணமடைந்த 18 கொவிட்- 19 தொற்றாளர்கள் நேற்று மருத்துவமனைகளை விட்டு வெளியேறினர்.

கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமைகளுக்கான சேனாபுரா சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 646 ஆக உள்ளது. அவர்களில், பாதிக்கப்பட்ட 03 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர சமூகத்திலிருந்து வேறு எந்த கொரோனா தொற்று சம்பவங்களும் பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்து அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: