ஆழிப்பேரலை தொடர்பான பயிற்சிக்கு இலங்கையின் 5 பாடசாலைகள் தெரிவு!

Sunday, April 1st, 2018

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் 18 நாடுகளில் 90 பாடசாலைகளில் நடத்தப்படவுள்ள ஆழிப்பேரலை தொடர்பான பயிற்சிகளில் இலங்கையில் இருந்து ஐந்து பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.

ஆழிப்பேரலை தொடர்பாக பாடசாலை முன்னாயத்தத்தினை வலுப்படுத்துவதற்கான பிராந்திய செயற்றிட்டம் ஒன்றிற்கு ஜப்பான் அரசாங்கம் ஆதரவளிக்கின்றது.

குறித்த செயற்றிட்டத்தில் இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேசியா, மாலைதீவுகள், மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளடங்கலாக 18 நாடுகளில் 90 பாடசாலைகளில் ஆழிப்பேரலை தொடர்பான 90 பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்கமைய, இந்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி இலங்கையின் காலி வித்யாலோக்க மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளதாக ஐ.நா அபிவிருத்தித் திட்டம் தெரிவித்துள்ளது.

Related posts: