ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய !

Friday, February 9th, 2018

எந்தவொரு நபருக்கும் புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர்மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு அரச ஊழியர் அடையாள அட்டை ஓய்வூதியஅடையாள அட்டை, மத குருமார்களுக்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்கால அடையாள அட்டைஆகியவற்றை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை  சமாதான நீதவான்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ,வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஅடையாள அட்டை ஆகியன வாக்களிப்புக்கு பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: