ஆளடையாள ஆவணங்கள் இல்லாதோரிற்கு தேர்தல் திணைக்கள அடையாள அட்டை வழங்க ஏற்பாடு!

Wednesday, January 17th, 2018

எதிர்வரும் 10.02.2018 அன்று நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திலிருந்து தமது ஆளடையாளத்தை நிருபிக்க ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய கிராம அலுவலர்கள் ஊடாக தற்காலிக அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்காளர் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து  தமது அளடையாளத்தை உறுதிப்படுத்தவதற்கு தேசிய அடையாள அட்டை செல்லுபடியான  கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரசசேவை ஓய்வூதிய அடையாள அட்டை, அரச சேவை முதியோர் அடையாள அட்டை ஆட்பதிவுத்திணைக்களத்தால் வழங்கப்பட்ட மதகுருமார்கள் அடையாள அட்டை என்பவற்றுள் ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும்

இந்த ஆவணங்கள் ஏதுமற்றவர்கள் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களிப்பு நிலையத்தில் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டுக்கள்,சாரதி அனுமதிப்பத்திரம் சார்பாக வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டுக்கள், மற்றும் அலுவலக அடையாள அட்டைகள் என்பன ஆளடையாள உறுதிப்படுத்தலுக்கு ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் நிறம்மாறி,தெளிவில்லாது,வாசிக்க முடியாத நிலையில் இருப்பவர்களும் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாதவர்களும் 1 1ஃ4ஒ1 அங்கல அளவுடைய அண்மையில் எடுக்கப்பட்ட வர்ண அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் இரண்டு பிரதிகளுடன் தமது பிரிவு கிராம அலுவலர் ஊடாக விண்ணப்பித்தல் வேண்டும்.இதற்கான இறுதித் திகதி 2.2.2018 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related posts: