அறநெறிப் பாடசாலை பாடத்திட்டத்தில் யோகா – இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் !

Sunday, June 24th, 2018

இலங்கையில் உள்ள அனைத்து இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியை செயற்படுத்தும் திட்டம் பன்னாட்டு யோகா தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இளம் சிறார்களுக்கு அவர்கள் மனம் ஏற்றுக்கொள்கின்ற வளரும் சிறு பருவத்திலேயே வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு கிரகித்துக் கொள்ளவும் ஒழுங்கந்தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் மனதிலும் உணர்ச்சிகளிலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மிகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத்தன்மையை வளர்க்கவும் அவர்களது இதயங்களிலுள்ள தெய்வீகத் தாமரையை மலரச் செய்வதற்கும் பயிற்சியளித்து வழிகாட்டி ஒழுக்கநெறி முறைசார்ந்த சமூகத்தை உருவாக்கும் இலட்சிய நோக்குடன் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் ஓரங்கமாக யோகாப் (சூரிய நமஸ்காரம்) பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts:


வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் - சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ...
மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இலங்கை வைத்திய அதிகாரிக...
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில் - சுகாதார சேவைகள் பணி...