அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரிடம் விசாரணை!

Thursday, February 15th, 2018

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் வெலிகட சிறைச்சாலை அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் உத்தரவிட்டுள்ளார்.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குறித்த இரண்டு சந்கேநபர்களிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணக்களம் சமர்ப்பித்த கோரிக்கையை ஆராய்ந்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

எதிர்வரும் 13, 14, மற்றும் 15 ஆம் திகதிகளில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, வெலிகட சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: