அரச பாடசாலைகளில் கடமையாற்றும் 116 அதிபர்கள் தரம் 11 ற்கு பதவி உயர்வு!

Tuesday, June 26th, 2018

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றைச் சேர்ந்த 116 பேருக்கு இலங்கை அதிபர் சேவையின் தரம் இரண்டிற்கு இரண்டாம் கட்டமாக கல்வி அமைச்சு பதவி உயர்வினை வழங்கியுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட பதவி உயர்வில் 36 சிறுபான்மை இனத்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுள் 27 தமிழர்களும் 9 முஸ்லிம்களும் உள்ளனர். பதவி உயர்வு பெற்ற தமிழ் அதிபர்களின் விபரம் வருமாறு: பி.சத்யேந்திரா, சீ.ராஜமாலினி, ஏ.புஸ்பா, ஏ.மகேந்திரன், ஜே.செல்வகுமார், எஸ்.சுதாகரன், கே.கார்மேகம், பீ.கௌரி, கே.ரவீந்திரராசா, எஸ்.ரூபசிங்கம், ஏ.சூரியவதனி, எம்.ஜெரால்ட் டயஸ், ரி.ஆனந்தன், ஜீ.குணசேகரன், எஸ்.ஆசைப்பிள்ளை, வீ.அன்பழகன், எஸ்.சிதாசன், ஜி.சுசிலா, எஸ்.ஜோன் தேவதாஸ், வீ.முருகதாஸ், எஸ்.ஜெயராணி, எஸ்.சிவஞானசுந்தரம், ஆர்.தமிழ்செல்வம் பிள்ளை, என்.மகேந்திரராஜா, வீ.ஜீவரட்ணம், என்.சிவலிங்கம்,

பதவி உயர்வுபெற்ற முஸ்லிம் அதிபர்களின் விபரம் வருமாறு:

எம்.எம்.முஸம்மில், ஐ.எல்.சிறாஜீதீன், டீ.எல்.அபூ அஸ்ரப், கே.எல்.உபைத்துல்லாஹ், இசற் கலீலு ரஹ்மான், எம்.எல்.பதியுதீன், எம்.ஆர்.எம்.றிஸ்கி, எஸ்.ஏ.இஸ்மத் பாதிமா, எம்.யூ.ஸானாஸ். முதற் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 148 பேருக்கு கல்வியமைச்சு இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: