அரச கூட்டுக்குள் குழப்பம்?
Monday, September 10th, 2018ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பிலும் பல கட்சிகளும் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்பானது நகைச்சுவை அறிவிப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களாலேயே மேற்படி கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. “தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சக்தி ஐ.தே.கவுக்கு இருக்கின்றது.
எமது கட்சியின் ஆசியுடனும் தலைவரின் விட்டுக்கொடுப்பாலேயுமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
எனவே பலவீனமடைந்த நிலையில் தற்போது இருப்பதாலேயே எதைப் பேசுவது என்று புரியாமல் மைத்திரி உளறுகின்றார்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Related posts:
தப்பியோடினாரா ஞானசார தேரர்?
தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் - மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது - காற்று வீசக்கூடும்...
|
|