அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தொழில்நுட்பவியலாளர்கள்!

18 கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்பவியலாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றில் ஈடுபடப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பத்து வருடங்களாக தாம் முன்வைத்து வரும் பிரச்சினைகளை அதிகாரிகள் உதாசீனம் செய்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, தங்களது போராட்டத்தின் முதல் கட்டமாக நேற்று முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமில்லாத வீதிகளில் பணிகளில் ஈடுபடுவதையும், கைப்பேசிகள் மூலமாக வழங்கி வந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதையும் நிறுத்திக்கொண்டிருப்பதாகவும் அச்சபையின் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோர்ஜ் அநுராத தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமது அடையாள போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முழுப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|