அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு பணிப்பு!
Wednesday, January 31st, 2018பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி , தற்போது சந்தையில் நிலவும் அரிசி தொகை மற்றும் மற்றைய விடயங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம் போன்று கிராமப்புற பொருளாதாரம் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
Related posts:
வடக்கில் 22 பாடசாலைகளில் 13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்!
கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எ...
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் - வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
|
|