அரசின் அலட்சியத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பூட்டு!

தீப்பெட்டிகளது உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமையினால், இன்று(23) தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தலையிட்டு இதற்குத் தேவையான மருந்துகளை சரியான முறையில் கொண்டு வராமைக் காரணமாகவே குறித்த இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தீப்பெட்டி மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டவுடன், அரசு மருந்துப் பொருட்களைக் கொண்டு வந்து தருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இதனால் நாட்டில் தீப்பெட்டி பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாதென்றும் குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பாதாள உலக கும்பலை கைது செய்ய இலங்கை - இந்தியா இணைவு!
தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசுவது சிறந்தத...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 886 பேர் கைது!
|
|