அரசாங்க நிறுவனங்களில் விரைவில் மாற்றம்?

Thursday, May 25th, 2017

அவுஸ்திரேலிய பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் அரசாங்க நிறுவன மட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடுத்த வாரம் முதல் இம்மாற்றங்கள் இடம்பெறுமென்றும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். இதற்கமைய அரச நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்களில் மாற்றம் இடம்பெறும். சில இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப் படலாமென்றும் அவர் கூறினார்.

நாட்டின் வினைத்திறனுடனான செயற்பாட்டிற்காக இரண்டு கட்டங்களில் முக்கிய மாற்றங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டியிருந்தது. அதில் ஒன்று அமைச்சரவை மாற்றம் மற்றையது அரச நிறுவனங்களில் மாற்றமாகும் அமைச்சரவை மாற்றம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது கட்டமாக அரச நிறுவனங்களில் மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மே மாதம் 18 முதல் 25 வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் பாரிய மாற்றம் கொண்டுவரப்படுமென நான் ஏற்கனவே ஊடகங்களுக்கு அறிவித்திருந்தேன். பலர் இதனை மறுத்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் தெரிவித்தார்

Related posts: