அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்!

1_Hambantota_Port Wednesday, December 6th, 2017

 

சீன நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியிருக்கின்றது.

மேலும் எதிர்வரும் 7ஆம் திகதி அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதன் பின் அமைச்சரவைப் பத்திரம் பெற்று வர்த்தமானி அறிவிப்பு விடுக்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.