அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைப்பு!

Thursday, September 13th, 2018

சிகரட்டுக்களை சில்லறையாக விற்பனை செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, இந்த அமைச்சரவை பத்திரம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பொருள் நுகர்வை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட சட்டங்களால் புகைப்பொருட்களின் விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் வரிமூலமான வருவாய் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: