அமெரிக்காவால் முடியாதது இலங்கையால் முடியுமா?

Thursday, March 15th, 2018

 

முடக்கப்பட்டுள்ள முகநூல் தொடர்பான விடயத்தில் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் அமெரிக்க ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

முகநூலில் வெளியிடப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் பொய்யான செய்திகளை நீக்க அமெரிக்காவினால் முடியாதபோது இலங்கையால் எவ்வாறு முடியும் என்று அமெரிக்காவின் சீ.என்.பி.சி ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் முகநூலில் தரவேற்றப்பட்டபோது அவற்றைத் தடுக்க இலங்கை அரசு முயற்சிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கண்டி வன்முறைச் சம்பவங்கள் வேறு இடங்களுக்கும் பரவாது தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிகத்தடை ஏற்படுத்தப்பட்;டது. இதனூடாக வன்முறை பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: