அமுலுக்கு வந்தது 25000 ரூபா தண்டப்பணம்!

Thursday, November 2nd, 2017

வீதிச் சட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பண சட்டம் நேற்று(01)முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.

போதையில் வானத்தை செலுத்துதல், காப்புறுதி சான்றிதழ் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல் , ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு குறித்த இந்த தணடப்பணம் விதிக்கப்படவுள்ளது.

இன்னும், வயது குறைந்த சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதில் ஊக்குவிக்கப்படும் பட்சத்தில் அதற்காக 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்வாங்க பொறிமுறை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலை...
சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்...
கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை!