அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூடுதலான முன்னேற்றம்!

Monday, July 3rd, 2017

நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் விடயத்தில் கூடுதலான முன்னேற்றம் இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிதியுதவியின் பெறுமதி 1640 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். இவற்றில் சுமார் 1500 மில்லியன் டொலர்கள் கடன் உதவியாகும். எஞ்சிய தொகை உதவியாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.

பாதை மற்றும் பாலங்களை நிர்மாணிப்பதற்காகவே கூடுதலான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள், நீர்வழங்கல் செயற்திட்டம், மின்சாரம் போன்ற துறைகளுக்காக கூடுதலான நிதி செலவிடப்பட்டிருப்பதாக நிதியமைச்சின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: