அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.
Wednesday, May 31st, 2017கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலை காரணமாக மழைரூபவ் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்குண்ட நிலையிலேயே மரணங்கள் சம்பவித்த அதேவேளைரூபவ் காணாமல்போன சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இறந்தோரில் கணிசமானோர் விதிக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களையும் மீறி பாதிக்கப்பட்ட பகுதிகளை வேடிக்கை பார்க்கச் சென்ற சமயத்திலேயே இடம்பெற்றதாகவும்ரூபவ் அறிவுறுத்தல்களை ஏற்று அதன்படி செயற்பட்டிருந்தால் இவ்வாறான மரணங்களை தவிர்த்திருக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மண்சரிவு போன்ற ஆபத்துகள் இருக்கும் நிலையில் மறுஅறிவித்தல் வரை குறித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்ற எச்சரிக்கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே காணாமல்போனோரது விபரங்கள் துறைசார்ந்தோரால் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|