அனந்தி மீது விரைவில் உரிய நடவடிக்கை !

Tuesday, July 4th, 2017

வடமாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் எனவும் அது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் தமிழரசு கட்சியின் தலைமை கூறியிருக்கின்றது எனவும் தெரியவருகின்றது.

நேற்றைய தினம் காலை 10 யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது இதன்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வடமாகாண சபையின் பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையிலும், இளைஞர் அணி உறுப்பினர் ஒருவர் எழுந்து மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் எழுந்து தமிழரசுக் கட்சியின் சார்பில் மாகாண சபைக்குள் வந்த திருமதி அனந்தி சசிதரன் கட்சியின் நிலைப்பர்டுகள், கொள்கைகளை மீறி நடந்து கொள்ளும் நிலையில் அவர் மிது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அனந்தி சசிதரன் தீது நடவடிக்கை சட்ட ரீதியாக எடுக்கப்படும் என உறுதியளித்தார் என தெரியவருகின்றது. அடுத்த கட்டமாக கட்சியின் மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு மாறாக செயந்பட்டிருக்கும் திருமதி அனந்தி சசிதரன் முன்னாள் இளைஞர் அணி தலைவர் சிவகரன் மற்றும் வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளிப்படையாக அறிவிக்கப்படும் எனக் கட்சித் தலைமை சார்பில் இக் கூட்டத்தில் கூறப்பட்டதாகவும் அறிய வந்தது.

Related posts: