அத்தியாவசிய சேவையானது எரிபொருள் விநியோகம்!

Wednesday, July 26th, 2017

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த சேவை மற்றும் அதனுடன் சதொடர்புடைய ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட பின்னர் பணிக்கு சமூகமளிக்க தவறுவோர் தாமாகவே வேலையிலிருந்து நீங்கிக்கொண்டதாக கருதப்படுவர்.இதற்கு மேலதிகமாக எரிபொருள் விநியோக நடவடிக்கையை அரசாங்கம் வழமை நிலைக்கு கொண்டுவந்திருப்பதனால் இந்த பணிகளில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட பௌசர்களை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எடுத்துவரப்படவேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts: