அடுத்த ஆண்டு முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்?

Tuesday, December 12th, 2017

மாகாண சபைத் தேர்தலை 2018 – மார்ச் மாதத்துக்குப் பின்னர் நடத்த முடியும் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் உள்ளிட்ட 7 பேர், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனு மீதான விசாரணையின் போது குறித்த தகவல் வழங்கப்பட்டது.

தொகுதி எல்லை மீள்நிர்ணயத்தை அடுத்து, மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று இதன்போது அறிவிக்கப்பட்டது. இந்த மனு எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts: