அடுத்துவரும் 8வருடத்திற்கான பொருளாதார கொள்கை வெளியீடு!

Tuesday, September 5th, 2017

நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 வருட காலத்திற்காக வகுக்கப்பட்ட பொருளாதாரக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் நேற்றுடன் 2 வருடகாலம் பூர்த்தியாகின்றது.

இரண்டு கட்சிகளும் இணைந்து 2025ஆம் ஆண்டளவில் எத்தகைய இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படவேண்டும், அதற்கான தொலைநோக்கு என்ன என்பதை உலகத்திற்கும் நாட்டுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் 2025 தூரநோக்கு திட்டம் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன் இங்கு சமூகமளித்திருந்த இளைஞர்கள் இது தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதிலளித்தனர்.

இளைஞர் பாராளுமன்றத்தில் உறுப்பினரான மட்டக்களப்பை சேர்ந்த யுவதி ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுதூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் அமைச்சர்கள் ,இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Related posts: