வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் தயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Monday, July 8th, 2019

வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சனின் தயார் மேரி யூக்கிறிஸ்தா மரியதாஸ் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மலர் வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியது.

பிரம்படி லேன் கொக்குவிலிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலன்ரின் (உதயன்) கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசன் ஆகியோர் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  


இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!
தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் பத்துக் குவிவாடிகளைப் பொருத்த நடவடிக்கை
வடக்கில் ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு!
நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!