மருதங்கேணி பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

22359405_1552144201491328_920824084_n Monday, October 9th, 2017

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனிடம் குறித்த விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த கழகங்களுக்கு இன்றையதினம் (09) விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலர் கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோர் குறித்த கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுன்னாகத்தில் "கோர்" அமைப்புக்கு நிரந்தர கட்டிடம்!
அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு இறுதி அஞ்சலி!
தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்ப...
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதனா...
சமூக வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு தொடர்பில் ஆசிரிய சமூகம் தெளிவுபடுத்த வேண்டும்.–தவநாதன்