மக்களின் தேவைப்பாடுகளுக்கு தீர்வுகள் காணப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

மக்களின் தேவைப்பாடுகளும், கோரிக்கைகளும் இனங்காணப்பட்டு அவற்றுக்கானதீர்வுகள் காணப்படவேண்டு மென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேசநிர்வாகச் செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்தாலும் மக்களுக்கான பிரச்சினைகளுக்கும், தேவைப்பாடுகளுக்கும் இதுவரையில் உரியமுறையில் தீர்வுகள் காணப்படவில்லை. அவற்றுக்கானதீர்வுகள் இதுவரையில் முழுமைப்படுத்தமுடியாதநிலையே இன்றும் காணப்படுகின்றது.
இவற்றுக்குஉரியமுறையில் தீர்வுகாணப்பட வேண்டுமென்பதில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும்,ஆலோசனையுடனும் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
கொக்குவில் மேற்குகல்திட்டி ஸ்ரீ ஞானவயிரவர் ஆலய பரிபாலன சபை மற்றும் ஸ்ரீ ஞானவயிரவர்சன சமூகநிலையப் பிரதிநிதிகளுடனான சந்திப்பை அடுத்துகோரிக்கைகள் அடங்கியமனுவைப் பெற்றுக்கொண்டபின்னரேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போதுபிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டகோரிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குகொண்டுசெல்லப்பட்டுஉரியதீர்வுகளைப் பெற்றுத்தருவதற்குமுழுமையானநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|