பளை செல்வபுரம் பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Monday, October 16th, 2017

பளை செல்வபுரம் பகுதிக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தாழ்நிலப்பகுதியான செல்வபுரம் பகுதியில் மழைகாலங்களில் நீங்கி நிற்பதனால் தாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை விளக்கிய மக்கள் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக அங்கு நீர் வடிகாலமைப்புத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுவருவதற்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனார்.

குறிப்பாக அங்கு வாழ்கின்ற மக்கள் நிரந்தர காணிகள் இல்லாத காரணத்தால் வீடமைப்பு மின்சாரம் உள்ளிட்ட வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எடுத்து விளக்கினர்

அத்துடன்  போக்குவரத்துக்கான வீதிகள் செப்பனிடல், போக்குவரத்து, மாலை நேரக் கல்வி , வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்த அதிகாரிகளூடாக அவற்றுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts: